search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் நமச்சிவாயம் பிறந்த நாள்"

    திருபுவனை வட்டார காங்கிரஸ் சார்பில் அமைச்சர் நமச்சிவாயம் பிறந்த நாள் விழா இன்று நடந்தது.

    திருபுவனை:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சி வாயத்துக்கு நாளை (சனிக்கிழமை) பிறந்தநாள் ஆகும்.

    இதையடுத்து திருபுவனை வட்டார காங்கிரஸ் சார்பில் அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.

    மதகடிப்பட்டு ரவுண்டானா அருகில் நடந்த விழாவுக்கு திருபுவனை வட்டார காங்கிரஸ் பொதுச்செயலாளர் எம்.பி. வெங்கடேசன், தலைவர் எத்திராஜுலு நாயுடு மற்றும் எஸ்.ஆர். பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு ‘கேக்’ வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயத்துக்கு ஆளுயர மாலை அணிவித்தும், சால்வைகள் அணிவித்தும் காங்கிரசார் வாழ்த்து தெரிவித்தனர்.

    விழாவில் பொ.செந்தில், ஆனந்தகுமார், எஸ்.பி. செந்தில், மணிமாறன், சிவக்குமார், சக்திவேல், வெங்கடேசன் என்ற ஆறுமுகம், நடராஜன், சந்திரன், அமாவாசை, சத்தியமூர்த்தி, ராமசாமி, பரமசிவம், அமர்நாதன், எம்.பி. பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×